தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு வருகிற 23-ந் தேதி மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் தூத:தக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுயதொழில் புரிய ஆர்வம் உள்ள முன்னாள் படைவீரர்கள் கலந்து கொள்ளலாம்.சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் கலந்து கொண்டு, தங்கள் மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com