தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய நண்பர் கைது

தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய நண்பர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய நண்பர் கைது
Published on

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் சுந்தரேசன். இவருடைய மகன் சங்கரநாராயணன் (வயது 31). இவரது நண்பர் தூத்துக்குடி பூப்பாண்டியாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த ராமலிங்கா என்ற டேவிட் (29). இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கரநாராயணன், அவரது நண்பரான தூத்துக்குடி பூப்பாண்டியாபுரம் மங்கள்ராஜ் என்பவரின் வீட்டின் முன்பு பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த டேவிட், சங்கரநாராயணனிடம் தகராறு செய்து, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை கைது செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com