தூத்துக்குடியில்டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருட்டு

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருடப்பட்டது.
தூத்துக்குடியில்டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருட்டு
Published on

தூத்துக்குடி சுப்பையாபுரம் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை கடந்த 27-ந் தேதி இரவு பூட்டிவிட்டு சென்றார்களாம். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், நேற்று காலையில் மீண்டும் கடையை திறக்க வந்தார்களாம். அப்போது, கடையின் பூட்டு திறந்து கிடந்தது. கடையில் இருந்த 8 மதுபாட்டில்கள் மற்றும் சில ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com