வேதாரண்யத்தில், 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் வேதாரண்யத்தில் நேற்று 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யத்தில், 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
Published on

வேதாரண்யம்:

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் வேதாரண்யத்தில் நேற்று 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் மணிக்கு 45 கி.மீ இருந்து 65 கி.மீ வரை சூறைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து மீன்வளத்துறை, மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

அதன்பேரில் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் இருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com