

ஈரோடு பெரியசேமூர்பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 21). இவரும், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த வேளாங்கன்னி (27) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இரு வீட்டாரையும் போலீசார் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.