விழுப்புரத்தில் ரெயில் மோதி முதியவர் சாவு

விழுப்புரத்தில் ரெயில் மோதி முதியவர் உயிழந்தா.
விழுப்புரத்தில் ரெயில் மோதி முதியவர் சாவு
Published on

விழுப்புரம் பெரியகாலனி நந்தனார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 86). இவருக்கு காது சரிவர கேட்காது. இவர் நேற்று மாலை விழுப்புரம் வண்டிமேடு ரெயில்வே கேட் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது புதுச்சேரியில் இருந்து ஹவுரா நோக்கிச்சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com