தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்
Published on

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கிகளின் அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஏற்கனவே மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் விவசாய உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் சாவியை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக அறிவித்திருந்தனர். நேற்று விருதுநகர் மாவட்ட சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, நடராஜன் ஆகியோர் தலைமையில் தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் விவசாய உபகரணங்களையும், வாகனங்களின் சாவிகளையும் இணை பதிவாளர் அலுவகத்தில் வாங்க மறுத்துவிட்ட நிலையில் நேற்று முதல் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்தில் 454 ஊழியர்கள் ஈடுபடுவதால் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணி பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com