பதவி ஏற்பு விழா: கவர்னர் மாளிகையில் 700 இருக்கைகள் தயார்

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவி ஏற்கிறார். இதற்காக கவர்னர் மாளிகையில் 700 இருக்கைகள் அங்கு போடப்பட்டுள்ளன.
பதவி ஏற்பு விழா: கவர்னர் மாளிகையில் 700 இருக்கைகள் தயார்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை ராஜ்பவனில் காலை 9 மணிக்கு பதவி ஏற்கிறார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்களின் உறவினர்கள், தி.மு.க.வின் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், தோழமை அரசியல் கட்சியினர் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற அரசியல் கட்சிகளில், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ஜ.க. எல்.முருகன், அ.ம.மு.க. டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட சில பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்பவனில் திறந்த வெளியில் இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக 700 இருக்கைகள் அங்கு போடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com