குழந்தைகள் மைய கட்டிடம் திறப்பு

குழந்தைகள் மைய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மைய கட்டிடம் திறப்பு
Published on

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்காக ரூ.19 லட்சத்தில் புதிய குழந்தைகள் மைய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த குழந்தைகள் மையம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும்.

இந்த கட்டிடம் இயற்கையாக குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றாற்போல் கலை ஓவியங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கற்றலை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இணையதள வசதியுடன் கூடிய எல்.இ.டி. டி.வி. பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கு பணிபுரியும் பணியாளர்களின் பணிசுமைகள் குறைந்து தங்கள் குழந்தைகளை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள வாய்ப்பாக இருக்கும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com