கணினி ஆய்வகம் திறப்பு விழா

பள்ளிக்கூடத்தில் கணினி ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
கணினி ஆய்வகம் திறப்பு விழா
Published on

சேரன்மாதேவி:

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் கலாம் கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் டி.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமெரிக்க மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக இயக்குனரும், மிக்சிகன் சிலம்பு தொண்டு நிறுவன தலைவருமான சுவாமிநாதன், அவருடைய மனைவி விஞ்ஞானி கார்த்திகா ஆகியோர் கணினி ஆய்வகத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

அமெரிக்க மிக்சிகன் மாகாண தமிழ் குழந்தைகளுக்கு இணையவழியில் தமிழ் மொழி பயிற்சி அளித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்சந்தர், ஆசிரியர் ஜேஸ்மாலா, ஓவிய ஆசிரியர் துரை இசக்கிமுத்து ஆகியோரை பாராட்டி சான்று வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com