சத்துணவு மைய புதிய கட்டிடங்கள் திறப்பு

சீர்காழி அருகே சத்துணவு மைய புதிய கட்டிடங்களை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
சத்துணவு மைய புதிய கட்டிடங்கள் திறப்பு
Published on

திருவெண்காடு:

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநகரி வேதராஜபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் சத்துணவு மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. சீர்காழி ஒன்றிய ஆணையர் சரவணன் தலைமை தாங்கினா. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன், ஒன்றியக் குழு துணை தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜன் வரவேற்றார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சிவக்குமார், கலையரசன், தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், மங்கை வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் தனராஜ் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்து உணவு பரிமாறினார். இதைப்போல கீழ சட்டநாதபுரம், கோனையாம்பட்டினம் ஆகிய ஊராட்சிகளில் சத்துணவு மைய புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com