பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா

ஆலங்குளம் அருகே பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காவலக்குறிச்சி கிராமம் மருதுபுரம்புதூரில் பகுதி நேர ரஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து காவலக்குறிச்சியில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தையும் திறந்து வைத்தார். இந்த விழாவில் தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com