நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா

தி.மு.க. இளைஞர், மருத்துவ, மாணவர் அணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நடந்தது.
நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா
Published on

நீட் தேர்வு

ராமநாதபுரம் மாவட்டம் தி.மு.க. இளைஞர் அணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா பாரதி நகர் அருகே உள்ள தனியார் மஹாலில் நேற்று நடந்தது. விழாவுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், மண்டபம் பேரூராட்சி உறுப்பினருமான சம்பத் ராஜா வரவேற்றார்.

மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பாரகு மற்றும் தி.மு.க சார்பு அணியினர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், வி.மெய்யநாதன், சி.வி.கணேசன், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கையெழுத்து இயக்கம்

சிறப்பு விருந்தினராக மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகரன், முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், இளைஞர் அணி நிர்வாகிகள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சம்பத்குமார், சத்தியந்திரன், கோபிநாத், தவ்பிக் ரகுமான், மாணவரணி நிர்வாகிகள் ஸ்டாலின், பொன்மணி, சங்கர், வசந்த், சண்முகப்பிரியா, சம்பத்குமார், மருத்துவர் அணி நிர்வாகிகள் எபினேசர் செல்வராஜ், கார்த்திக், சரவணாபாலன், சேகர், கணேசன், கார்த்திகேயன், மதிவாணன், மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். முடிவில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com