வியாபாரிகள் நலச்சங்க பெயர் பலகை திறப்பு

கடையம் அருகே வியாபாரிகள் நலச்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
வியாபாரிகள் நலச்சங்க பெயர் பலகை திறப்பு
Published on

கடையம்:

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி தென்பொதிகை வியாபாரிகள் சங்க பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் பழக்கடை சுலைமான், துணைச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வணிகர் நலச்சங்க தலைவர் பரமசிவன், செயலாளர் சந்திரமுகி ராஜா, பாவூர்சத்திரம் வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். தென்பொதிகை வியாபாரிகள் சங்க செயலாளர் நவாஸ்கான் வரவேற்றார். பொருளாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில செயலாளர் காளிதாசன் பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி வணிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்வேல், குளத்தூர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் பிச்சையா, தங்கையா, முகம்மது கவுது, முகம்மது யூசுப் மற்றும் முதலியார்பட்டி, திருமலையப்பபுரம் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com