சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகளை அரசு அறிவித்து உள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்: தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதன்படி, வருகிற 24ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகள், மருந்து, உணவு உள்ளிட்ட பொருட்களின் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகளை அரசு அறிவித்து உள்ளது.

இதன்படி, கடன் உதவி பெறும் போது செலுத்த வேண்டிய முத்திரை தாள் பதிவு கட்டணம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சிட்கோ மனைகள் fasttrack அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழிற்சாலைகளில் பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கப்படும். ஆட்டோ ரிக்சா, கால்டாக்ஸி EMI கால அவகாசம் நீட்டிப்பு குறித்து ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தப்படும். ஆட்டோ ரிக்சா, கால்டாக்ஸி சாலை வரி கட்டணம் செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com