புயலின் தாக்கம்: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை

சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண முடிகிறது.
புயலின் தாக்கம்: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
Published on

சென்னை,

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே சுமார் 110 கி.மீ. தெலைவில் மையம் கெண்டிருந்தது. இது இன்று முற்பகலில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், நாளை (டிச.5) ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடி பகுதியில் அதிகபட்சமாக 29 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. இதேபேல் ஆவடி பகுதியில் 28 செ.மீ., ஆலந்தூர் விமான நிலைய பகுதிகளில் தலா 25 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.சென்னையை மிக்ஜாம் புயல் அடித்து துவம்சம் செய்து இருக்கிறது. இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண முடிகிறது.

இடைவிடாது பெய்து வரும் மழையால் சென்னையே தத்தளிக்கிறது. சென்னை நகர் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை விடாத சூழலில், மேலும் மேலும் தண்ணீரின் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையே, அவசர உதவிக்காக பல்வேறு எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com