தொடர் மழை: கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக ரத்து

கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர் மழை: கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக ரத்து
Published on

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவேகானந்தர் பாறைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு படகு சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com