வங்கி மேலாளரை அறைந்த விவகாரம்: மு.க.அழகிரி மகளுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை அடையாறில் உள்ள எஸ்பிஐ வங்கி மேலாளரை கயல்விழி, அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கி மேலாளரை அறைந்த விவகாரம்: மு.க.அழகிரி மகளுக்கு எதிரான வழக்கில்  ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Published on: 

சென்னை,

சென்னை அடையார் வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி யின் மகள் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கயல்விழி மனு தாக்கல் செய்தார்.

அதில், "வங்கி மேலாளர்தான் என்னை தகாத வார்த் தைகளால் திட்டினார். அதை மறைத்து எனக்கு எதி ராக போலீசில் புகார் செய்துள்ளார். எனவே, வழக்கை ரத்து செய்யவேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கயல்விழி தரப்பில் மனுவை திரும்ப பெறுவதாக கூறப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு,மனுவை திரும்ப பெற அனுமதித்து, அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, "மனுதாரர் கயல்விழி மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை 4 வாரங்களில் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் சாஸ்திரிநகர் போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தவிட்டார்.

X