வடமாநில இளைஞரை தாக்கிய சம்பவம் - இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம்

இந்த சம்பவம் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Incident of attacking a young man from North India - Director Mari Selvaraj condemns the act
Published on

சென்னை ,

கஞ்சா பேதையில் சமீபத்தில் இளைஞர்கள் சிலர் ரெயிலில் பயணித்த வடமாநில இளைஞரை கடத்தி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இயக்குனர் மாரி செல்வராஜ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சென்னை மின்சார ரெயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது.

கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com