கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

புதுக்கடை அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
Published on

புதுக்கடை,

புதுக்கடை அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

புதுக்கடை பகுதியில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக பைங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் பைங்குளம் அருகே உள்ள அம்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கிலோ கஞ்சா மற்றும் தராசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், தூத்தூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 22), இனயம் புத்தன் துறை பகுதியை சேர்ந்த சகாய சுபின் (22) மற்றும் தூத்தூர் பகுதியை சேர்ந்த மஜோப் (25) என்றும், கஞ்சாவை பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததும் அம்பலமானது.

மேலும் ஆகாஷ் பி.எஸ்சி. விசுவல் கம்யூனிகேஷனும், மஜோப் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் என்பதும், சகாய சுபின் கடல் தொழில் செய்பவர் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com