வருமான வரித்துறை சோதனை நிறைவு: தேர்தலை ரத்து செய்ய சதி - தி.மு.க. வேட்பாளர் கனிமொழி

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. #Kanimozhi
வருமான வரித்துறை சோதனை நிறைவு: தேர்தலை ரத்து செய்ய சதி - தி.மு.க. வேட்பாளர் கனிமொழி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் குறிஞ்சி நகர் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் 2 மணி நேரமாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது.

இதனை தொடர்ந்து திமுக வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எங்களை அச்சுறுத்துவதற்காக இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றது. தோல்வி பயத்தில் இந்த சோதனை நடைபெற்றது. வேலூரை போல தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்திவிடலாம் என சதி நடைபெறுகிறது. தி.மு.க மீது அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com