சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் வருமான வரி துறை சோதனை

சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் வருமான வரி துறை சோதனை
Published on

தமிழகம் முழுவதும் 160 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பு பண ஒழிப்பு முயற்சியின் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை என தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது. வீட்டுக்குள் தினகரன் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நுழைந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள சசிகலா கணவர் நடராஜன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் தனி அறையில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

போயஸ் கார்டனிலுள்ள ஜெயா தொலைக்காட்சியின் பழைய அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com