நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை,
சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் (sea shell) உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உணவக அதிகாரிகள் வராத நிலையில் காவலாளியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதைபோல சென்னையில் உள்ள நடிகர் ஆர்யா வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






