செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை

அரசியல் கடமைகளை செய்ய விடாமல் சோதனை என்ற பெயரில் சிறைபிடித்து வைத்துள்ளனர், என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவிடாமல் இந்தி பேசும் வருமானவரித்துறையினர் என்னை சிறைப்பிடித்துள்ளனர். எனது அரசியல் கடமைகளை செய்ய விடாமல் சோதனை என்ற பெயரில் சிறைபிடித்து வைத்துள்ளனர். ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே முடக்கி வைக்க முடிவெடுத்து சோதனை செய்து வருகின்றனர்.

இது ஜனநாயக செயல்பாடுகளை தடுக்கவும், எதிர்கட்சியின் குரலை ஒடுக்கவும் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கை செயலாக தான் இருக்கிறது. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்திற்கு வருவதால் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வருமானவரித்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் இருக்குமாறு முடக்கி வைத்துவிட்டனர். இதேபோல மு.க.அழகிரி வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com