ஸ்ரீபெரும்புதூரில் 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி, சிப்காட் பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த சோதனையானது 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. ப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்துக்குத் தொடர்புடைய இடங்களான சென்னை, ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com