சேகர்ரெட்டி வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சேகர்ரெட்டி வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்.
சேகர்ரெட்டி வீட்டில் நடந்த சோதனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
Published on

சென்னை,

சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. கைப்பற்றப்பட்ட டைரியில் பணம் கொடுக்கல் மற்றும் வாங்கல் தொடர்பான பல்வேறு விவரங்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதில் அப்போதயை அமைச்சர்கள் ஏராளமானோரின் பெயர்களும் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர்கள் இடம்பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கேட்டபோது, வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com