கோவையில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கோவையில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
Published on

கோவை,

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுக இளைஞரணியில் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்படும், இவர் ஒப்பந்ததார் ஆகவும் உள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து செய்துள்ளார். இவரது மனைவி சர்மிளா சந்திரசேகர் கோவை மாநகராட்சியில் 38-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இந்நிலையில் வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும், முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடத்தப்படுகிறது.

சந்திரசேகரின் தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சந்திரசேகர் வீட்டில் காலை 11 மணி முதல், நள்ளிரவு 12 மணி வரை 13 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தில் சந்திரசேகரின் நண்பரான சந்திரபிரகாஷ் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com