நெல்லை: பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை


நெல்லை: பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
x

வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது

திருநெல்வேலி

நெல்லையில் பல்வேறு பீடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், நெல்லை டவுனில் பிரபல காஜா பீடி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய பாதுகாப்புப்படையினர் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையால் நெல்லை டவுனில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

1 More update

Next Story