தேங்காய் சிரட்டை விலை உயர்வு

தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.
தேங்காய் சிரட்டை விலை உயர்வு
Published on

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். பின்னர் தேங்காய் விளைந்தவுடன் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விற்றது, தற்போது ரூ.12-க்கு விற்பனையாகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com