

சென்னை,
செங்கோட்டை, நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் ரெயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:06182) வண்டியில் கூடுதலாக 4 படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி இன்று (சனிக்கிழமை) இயக்கப்படும்.
இதைபோல் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் தினசரி சிறப்பு ரெயிலில் (02662) ஒரு படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி கூடுதலாக இன்று இணைக்கப்படும்.
* நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (06064) வண்டியில் கூடுதலாக 6 படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி இன்று இணைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.