கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: "ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - சுகாதாரத்துறை வட்டாரம் தகவல்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: "ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - சுகாதாரத்துறை வட்டாரம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 681 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 84 ஆயிரத்து 361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. சென்னை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரமாக உள்ளது. இதனால் படுக்கை வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 108 ஆம்புலன்ஸ் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த இரு தினங்களில் தமிழகத்தில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

கெரேனா நேயாளிகளை மட்டும் அழைத்து வர 210 அவசர வாகனங்கள் இயங்குவதாகவும், தேவைக்கேற்ப இது மேலும் அதிகப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ் சேவைக்காக 24 மணி நேரமும் தனி கட்டுப்பாட்டு அறை இயங்குவதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com