கள்ளச்சாராய புழக்கம் அதிகரிப்பு: அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் - அண்ணாமலை

தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் பிரச்சினை இல்லை, நீட் தேர்வு மேல் குற்றச்சாட்டு இல்லை. இந்த ஆண்டு நீட் தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மாணவர்கள் வைக்கும் இரண்டு குற்றச்சாட்டுகள், ஒன்று நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது மீது; மற்றொன்று நீட் தேர்வு நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை மீது. நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு தவறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாள் கசிய விடுவோர்க்கு தனி தண்டனை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பா.ஜ.க. அளித்துள்ளது. 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தின் புழக்கம் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயப் புழக்கம் அதிகரித்த நிலையில் அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். மணல் கடத்தும் கும்பல் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்?

நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளில் உடன்பாடில்லை. அவர் அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன. கள்ளர் சீர் மரபு பள்ளிகளை, ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு கீழ் கொண்டுவரும் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆல்பாபெட் ஆர்டரில் மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க முடியாது. மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன. மாணவர்கள் சமூக நீதிப்படை என்ற பரிந்துரை குறித்து முழு விவரம் இல்லை. பள்ளி அளவில் மாணவர் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com