தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததால் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.அதிமுகவின் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை. வி.பி.துரைசாமி எந்தக்கட்சியில் இருந்து எந்தக்கட்சிக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.

வி.பி.துரைசாமி போன்று கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் இல்லை. சட்டமன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொலை நடக்காத நாளே கிடையாது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல' என்பது பொன்னையனின் தனிப்பட்ட கருத்து என- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com