

திண்டுக்கல்,
'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா தளங்களுக்கான நுழைவுக் கட்டணம் அரசாணைப்படி மாற்றப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மோயர் சதுக்கம், குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கான நுழைவுக் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தங்களில் பேருந்துகளுக்கு 100 ரூபாய், கார் மற்றும் வேன்களுக்கு 50 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.