சிவகாசியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

வழக்கத்தை காட்டிலும் சிவகாசியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
சிவகாசியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
Published on

சிவகாசி, 

வழக்கத்தை காட்டிலும் சிவகாசியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கந்தக பூமி

இந்தியாவில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மே மாதம் தொடங்குவதற்கு முன்னரே விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக கந்தக பூமியான சிவகாசியில் கடந்த சில நாட்களாக காலை முதல் மாலை வரை வழக்கத்தை காட்டிலும் கடுமையாக வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பல இடங்களில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.

குளிர்பான கடை

சாலையில் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களிலும் செல்ல அச்சப்படும் பொதுமக்கள் அவசர தேவைக்கு மட்டும் வெளியே வந்து செல்கிறார். வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு, அதாவது மாலை நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

காலையில் இருந்து மாலை வரை அத்தியாவசிய பணிக்காக வெளியே வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்த தணிக்க இளநீர், நுங்கு, கரும்புசாறு, பழரசம், குளிர்பானங்கள் ஆகியவற்றை அதிக அளவில் வாங்கி குடிக்கின்றனா. இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

மின்சாரம் துண்டிப்பு

பொது மக்களின் தேவையை அறிந்து பல இடங்களில் புதிய கடைகள் உருவாகி உள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து கொசுக்கடியில் அவதிப்படும் நிலையும் அதிகரித்துள்ளது.

மேலும் அளவுக்கு அதிகமான வெயிலின் தாக்கம் இருப்பதால் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை எச்சரிக்கையாக இருக்கும் படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com