மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
Published on

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஆரம்பத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் போகப் போக அதன் கோரத்தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு உள்பட குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பெண்கள் குடை பிடித்த படி சென்றனர். விருதுநகரில் நேற்று 105.8 டிகிரி வெயில் பதிவானது. இந்தநிலையில் வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் (திங்கட்கிழமை) விடைபெற உள்ளது. இதன்பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com