வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரிப்பு

தாயில்பட்டியில் உள்ள கண்மாயில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது.
வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரிப்பு
Published on

தாயில்பட்டி, 

தாயில்பட்டியில் உள்ள கண்மாயில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது.

பெரியகுளம் கண்மாய்

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் பெரியகுளம் கண்மாய் கரையில் உள்ள மரங்களில் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து செங்கால் நாரை வகையை சேர்ந்த பறவைகள் ஏராளமாக வந்து கூடி கட்டி தங்கி உள்ளன.

இ்ந்த பறவைகள் ஆண்டு தோறும் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரத்தில் உள்ள மரங்களில் மார்ச் மாதக்கடைசியில் தங்கி குஞ்சுகள் பொறித்து பறக்கும் தருவாயில் வந்ததும் தங்களது தாய் நாட்டிற்கு சென்று விடும்.

வெளிநாட்டு பறவைகள்

பல ஆண்டுகளாக இவ்வாறு பறவைகள் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சங்கரபாண்டியபுரம் பகுதியில் கண்மாய்கள் முற்றிலும் வறண்டு போனதால் இப்பகுதியில் பறவைகள் ஒன்றுகூட வரவில்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக முதல்முறையாக தாயில்பட்டி பகுதியில் உள்ள கண்மாயில் போதிய அளவு நீர் இருப்பதாலும், மீன்கள் வளர்க்கப்பட்டு வருவதாலும் உணவிற்காக செங்கால் நாரைகள் எண்ணற்றவை இங்கு வந்துள்ளன. தொடர்ந்து பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் இந்த பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com