சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - சுற்றுலா தொழில் செய்வோர் மகிழ்ச்சி

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - சுற்றுலா தொழில் செய்வோர் மகிழ்ச்சி
Published on

மாமல்லபுரம்,

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நவம்பர்-மார்ச் மாதங்களில் மாமல்லபுரம் வந்து இங்குள்ள புராதன சின்னங்கள் அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம், கடற்கரை கோயில், புலிக்குகை போன்ற பகுதிகளை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து விட்டு அருகே உள்ள கடம்பாடி, வெண்புருஷம் கிராமங்களுக்கு சைக்கிள் உலா சென்று அங்குள்ள கிராம மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தை பார்த்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2020 ல், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக இந்திய அரசு, சர்வதேச விமான சேவையை ரத்து செய்ததால், வெளிநாட்டவர் வருகை தடைபட்டு சுற்றுலா தொழில் முடங்கியது.

தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்த பட்டதால், சர்வதேச விமானங்கள் சேவை துவங்கியது. இதனால் வெளிநாட்டு பயணிகள் இந்திய சுற்றுலா வந்து, மாமல்லபுரம் உள்ளிட்ட தென் மாநில பகுதிகளில், சுற்றுலா வருவது அதிகரித்துள்ளது.

சர்வதேச சுற்றுலா பயணிகள் இந்தியா வர துவங்கியதால் சுற்றுலா ஏற்பாடு செய்வோர், டூரிஸ்ட் கார் ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், ஹோட்டல் உரிமையாளர் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com