வெல்லம் விலை உயர்வு

வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
வெல்லம் விலை உயர்வு
Published on

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்புகளை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர். இந்தநிலையில் கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,180-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,170-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ. 1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ 1,220-க்கும் விற்பனையானது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com