வெல்லம் விலை உயர்வு

வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
வெல்லம் விலை உயர்வு
Published on

 நொய்யல சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். விவசாயிகள் கரும்புகளை புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,240-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,210-க்கும் விற்பனையானது. தற்போது 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,290-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ 1,250-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com