வெல்லம் விலை உயர்வு

வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
வெல்லம் விலை உயர்வு
Published on

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் அருகாமையில் செயல்பட்டு வரும் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1,250- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,300 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம்ரூ.1,500 வரையிலும் விற்பனையானது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்க உள்ள நிலையில் வெல்லம் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com