சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

வேலூர் கோட்டை அருங்காட்சியகத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
Published on

வேலூர் கோட்டை முக்கிய சுற்றுலா தலமாக காணப்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கோடைகால விடுமுறை என்பதால் கோட்டைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு வருபவர்கள் கோட்டையில் உள்ள அருங்காட்சியத்துக்கு சென்று தொன்மை வாய்ந்த பொருட்களை பார்வையிடுகின்றனர். இந்த கோடை விடுமுறையில் அருங்காட்சியகத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறுகையில், வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பம், குடும்பமாக வருகை தருகின்றனர். தற்போது புழக்கத்தில் இல்லாத நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் காட்சிபடுத்தி உள்ளோம். இதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். வருகிற 18-ந் தேதி சர்வதேச அருங்காட்சியக தினம் என்பதால் அன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com