ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18,500 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18,500 கன அடியாக அதிகரிப்பு
Published on

தர்மபுரி,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று 18,500 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com