குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்

குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சீசன் காலங்களில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று வார விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com