அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
Published on

தென்காசி,

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல் போட்டு மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அவ்வப்போது போலீசார் சரிசெய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com