ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு

மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒகேனக்கல்,

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக வந்தது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது. இதனால் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.

மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com