ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Published on

பென்னாகரம்,

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.          

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com