மவுசு அதிகரிப்பு, விளைச்சல் குறைவு: எலுமிச்சை பழம் விலை கிடுகிடு உயர்வு

போதுமான மழை இல்லாததால் எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளது.
மவுசு அதிகரிப்பு, விளைச்சல் குறைவு: எலுமிச்சை பழம் விலை கிடுகிடு உயர்வு
Published on

சென்னை,

கோடை காலம் வந்தாலே எலுமிச்சம் பழத்திற்கு மவுசு அதிகரித்துவிடும். மற்ற நேரங்களில் எல்லாம் ஊறுகாய் தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எலுமிச்சை, கோடை காலத்தில் ஜூஸ் தயாரிப்புக்கும் அதிகம் பயன்படுத்தப்படுவதால், அதற்கு மவுசு அதிகரித்து விடுகிறது.

தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் புளியங்குடி, சிவகிரி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், கடையம், சிங்கிலிபட்டி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால் எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளது.

40 டன் (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) விளைச்சல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 டன் அளவுக்கே இருக்கிறது. அதனால், வரத்தும் 50 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், எலுமிச்சை விலையும் அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் (மார்ச்) ரூ.90-க்கு விற்பனையான ஒரு கிலோ எலுமிச்சை தற்போது ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 15-ந் தேதி வரை எலுமிச்சை சீசன் இருந்தாலும், விளைச்சல் குறைவால் இன்னும் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com