வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

கோடைகாலம் முடிந்த நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
Published on

ஆர்.எஸ்.மங்கலம், 

கோடைகாலம் முடிந்த நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைகால சீசன் ஆகும். இந்த 4 மாதங்களில் இயல்பாகவே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஜூலை மாதம் பிறந்த பின்னர் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து பெரும்பாலான ஊர்களில் இதமான காற்று வீச தொடங்கி விடும். அதிலும் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி விடுவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு மழையும் பெய்ய தொடங்கிவிடும்.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடைகாலம் முடிந்தும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடந்த 1 மாதத்திற்கு மேலாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

பொதுமக்கள் அவதி

தொண்டியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு கடுமையாக அனல் காற்றின் தாக்கம் இருந்து வருகின்றது. சாலை முழுவதும் தண்ணீர் ஓடுவது போல் கானல் நீர் தெரிகின்றது. ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர் திருப்பாலைக்குடி, தேவிபட்டினம், சோழந்தூர், தொண்டி, திருவாடானை மற்றும் ராமநாதபுரம் என மாவட்டம் முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

கடும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com