

நெல்லை,
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 67.61 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 394 கன அடியாக உள்ளது. இந்த தண்ணீர் அணையின் உள்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்ததால், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியை பார்வையிட மட்டும் அனுமதித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை நீர்மட்டம் 62 (உச்சநீர்மட்டம் 85) அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 56 (84) அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 50 (70) அடியாகவும் உள்ளது.